தீபாவளி


தீபாவளி என்பது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புகழ்பெற்ற ஒரு பண்டிகையாகும்.
'தீபம்' என்றால் ஒளி விளக்கு, 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, மன இருள் அகல, இறை அருள் கிடைக்கக் கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

தீபாவளி பண்டிகை என்பது இந்தியாவின் தென் பகுதிகளில் 3 நாட்களுக்கு கொண்டாடப்படும். ஆனால் இந்தியாவின் வட பகுதிகளில் 6 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
தீபங்களின் திருவிழா என பரவலாக அழைக்கப்படும் இந்த பண்டிகையில், பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கூடிய பண்டிகையின் அடையாளமாகும்.

தீபாவளி என்ற உடன் அனைவருக்கும் நினைவு வருவது புத்தாடை, பட்டாசு, இனிப்புப் பண்டங்கள்.
இத்தனை சிறப்பு கொண்ட தீபாவளி எப்படி வந்தது , ஏன் கொண்டாடப்படுகின்றது என்பதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.